ராகுல் காநதியின் பிறந்தநாள்
திருத்தணி நூற்றுக்கணக்கான இளைஞர்..
பொதுதேர்வில் அதிகமதிப்பெண் பெற..
இளைஞர் காங்கிரஸ் தலைவராக யுவராஜா தேர்வு..
கானாத்தூரில் நடந்த ஆளுமைபயிற்சி...
திருத்தணி தொகுதியில் மாணவாகளுக்கு...
திருத்தணியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில்..
தமிழ்நாடு  இளைஞர்  காங்கிரஸ்ேதி
திருத்தணியில் பள்ளி மாணவர்களுக்கு இலவசகாலணி..
அரக்கோணம் பாராளுமன்ற நிர்வாகிகள்...
திருத்தணியில் இளைஞர் காங்கிரசார் ஊர்வலம்...
ஆற்காட்டில் ராகுல்காந்தி பிறந்தநாள் விழா...
கக்கன் நூற்றாண்டுவிழா ஏழைகளுக்கு நலத்திட்டஉதவி
மாநில அளவிலான ஆளுமைபயிற்சி...
ராகுல்காந்தி பிறந்தநாள் விழா...
இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்...
கூடங்குளம் பிரச்சனையில் 6 கோடிமக்களுக்காக...
ராணிப்பேட்டையில் இளைஞர்காங்கிஸ்...

திருத்தணியில் இளைஞர்கள் ரத்ததானமுகா்...

நாளிதழ் - தினகரன்                                                                                       தேதி – 03.11.2012

கூடங்குளம்  பிரச்சனையில்
6 கோடிமக்களுக்காக 5000பேர்இடம்பெயர்வதில்தவறில்லை
விழுப்புரம், நவம்பர் 3 – கூடங்குளம்பிரச்னையில் 6 கோடிமக்களுக்காக 5 ஆயிரம்பேர்  இடம்பெயர்வதிர்  தவறு  இல்லை  என்று  அழகிரிஎம்.பி.   பேசியுள்ளார்.
கூடங்குளம்  அணுமின்நிலையத்தை  உடனே  திறக்க வேண்டும்.உதயகுமாரை  கைது  செய்ய  வேண்டுமென  வலியுறுத்தியும்  தமிழகத்தில்  நிலவும்  மின்வெட்டை  கண்டித்தும்  விழுப்புரம்  பாராளுமன்றதொகுதி இளைஞர்காங்கிரஸ்  சார்பில் ஆர்ப்பாட்டம்  விழுப்புரம்  பெருந்திட்ட வளாகம்  முன்பு  நேற்று  நடந்தது.

இளைஞர்  காங்கிரஸ்  தலைவர்  சிவா  தலைமை  தாங்கினார்.செயலாளர்  உதயஆனந்தன், சட்டமன்ற  தொகுதி  தலைவர்  இளையராஜா, அருளப்பன்  ஆகியோர்  முன்னிலை  வகித்தனர்.  இளைஞர்  மாநில  காங்கிரஸ்  பொதுச்செயலாளர்  நாசேராஜேஷ்  வாழ்த்திபேசினார்.  சிறப்பு  விருந்தினராக  கலந்து  கொண்டு  அழகிரிஎம்.பி. பேசியதாவது.

கூடங்குளம்  அணுமின்நிலையம்  முலம் 1000மெகாவாட்  மின்சாரம்கிடைக்கும்.  அதில் 90 சதவீதம்  தமிழகத்திற்கு  கிடைக்கும்.  தமிழகத்தில்  தற்போது 15 மணிநேரத்திற்கு  மேலாக  மின்வெட்டு  நீடிக்கிறது. அதைபோக்க கூடங்குளம் அணுமின்நிலையம் தேவை.நம்நாட்டில்  ரஷ்யா  இந்த  கூடங்குளத்தை  அமைத்துள்ளதால்  அமெரிக்கா,பிரான்ஸ்  போன்ற  நாட்டுக்கு பிடிக்கவில்லை.  இதனால் வருங்காலத்தில் ரஷ்யாவை  நம்பி  இந்தியா  இருக்கும்.  அமெரிக்காவின்  வர்த்தகம்பாதிக்கும்  என்பதால்  அதை  நிறுத்துவதற்கு  முயற்சிக்கின்றனர்.

அதற்காகத்தான் உதயகுமார் செயல்படுகிறார்.  கூடங்குளம் அணுமின்நிலையம் நவீனதொரில் நுட்பங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது  கூடங்குளத்தில்  உள்ள  உதயகுமார் 5 ஆயிரம்மக்கள் 50 கி.மீ. தூரம் தள்ளிச்சென்று  குடியிருப்பது எந்ததவறும் இல்லை.  அவர்களுக்கு  தேவையான  உதவிகளை  அரசு செய்து கொடுக்க  தயாராக  இருக்கிறது.6 கோடி  மக்களுக்காக 5 ஆயிரம்பேர்  இடம்பெயர்வதில்  தவறில்லை.

நெய்வேலியில்50ஆயிரம்  ஏக்கர் பரப்பில்  பழுப்பு நிலக்கரி  எடுத்து  மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.  இதில் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் காலியானது.  அவர்கள் வாழ்க்கையை  இழந்து  நாட்டுக்கு  ஒளியேற்றினர்.  இவ்வாறு அவர் பேசினார்.  ஆர்பாட்டத்தில்  மாவட்ட மாணவர் காங்கிரஸ்  செயலாளர்ஸ்ரீராம், ராஜா  உட்பட  பலர்  கலந்து  கொண்டனர்.

இதற்கிடையில்  இளைஞர்  காங்கிரஸ்  விழுப்புரம் தொகுதிதலைவர் சிவா  ஒரு  தலைப்பட்சமாக  செயல்படுகிறார்  என்று  கூறி  பாராளுமன்ற  தொகுதி  துணைத்தலைவர்  சோமசுந்தரம், வானூர்  இளைஞர்  காங்கிரஸ்தலைவர் மோகன்தாஸ், வாசுதேவன் உள்ளிட்ட  நிர்வாகிகள்  ஆர்ப்பாட்டத்தை  புறக்கணித்துவிட்டு அங்கிருந்து  கலைந்து  சென்றனர்.

 

 

  Page 2